யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் காயம அடைந்தவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீ றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இன்று காலை குடத்தனை- மாளிகைகாடு பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயம டைந்த நிலையில் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை அவர்கள் அனுமதி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.