கொரோனா தடுப்பு செயற்பாட்டிற்காக பொலிசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமசிங்கவிற்கு அவர் இதனை அறிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட வழக்கில், அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பொலிசாரால் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என தான் நீதிமன்றத்தில் வாதிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் நுகேகொட நீதிமன்றத்தில் பொலிசார் மேலதிக விளக்கம் கோரி தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என்ற காரணத்தினால் ரஞ்சனிற்கு பிணை வழங்கப்படவில்லையென நீதிவான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டமா அதிபரும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.