காதலனை தேடி ஸ்கூட்டரில் 300 கிமீ தனியே பெங்களூரிலிருந்து திருப்பூர் வந்த பெண் மீது காதலன் சரமாரி தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 7, 2020

காதலனை தேடி ஸ்கூட்டரில் 300 கிமீ தனியே பெங்களூரிலிருந்து திருப்பூர் வந்த பெண் மீது காதலன் சரமாரி தாக்குதல்!


தான் காதலித்து வந்த இளைஞர் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த பெங்களூருவிலிருந்து திருப்பூருக்கு பைக்கில் வந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட ஆயிகவுண்டம்பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 29 வயது இளைஞர் ஒருவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருடன் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண்மணி வேலை செய்து வந்துள்ளார்.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அந்த இளைஞரும் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வந்து வீடியோ வேலை செய்ய தொடங்கியுள்ளார்.


இதனிடையே என்ற இளைஞருக்கு ஈரோட்டை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக காதலியிடம் இளைஞர் சரிவர பேசாமல் இருந்துள்ளார். சந்தேகம் அடைந்த இளம் பெண் தன்னுடைய அலுவல் நண்பர்களிடம் காதலன் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை தெரிந்தவுடன் கர்நாடகா அரசாங்கத்திடம் அனுமதி பெற்று இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு வந்துள்ளார். உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். அதையும் மீறி உடனடியாக தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

தன் காதல் இரு சக்கர வாகனத்தில் வருவதை உணர்ந்த இளைஞர் தன்னுடைய வீட்டை பூட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த இளைஞர் தன்னுடைய காதலியை எட்டி உதைத்துள்ளார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அப்பகுதிக்கு விரைந்து வந்த அதிகாரிகள் காதலியையும் காதலனின் வீட்டினரையும் பேச வைத்தனர். அதன்பிறகு அவரை காரில் பத்திரமாக ஆந்திராவுக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆனால் அந்த பெண் தான் மீண்டும் கர்நாடகாவிற்கு செல்வதாக அழுதுகொண்டே காரில் சென்றுள்ளார்.