குவைத்திலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1486 ஆக உயர்வு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

குவைத்திலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1486 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


குறித்த 15 பேரும் குவைட்டில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1486 ஆக அதிகரித்துள்ளது.


இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 731 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.