கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (ஏப்ரல் 12) ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
56 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
147 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 157 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.