கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் அபாய வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகள் இன்று (12) நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த இரு பொலிஸ் பிரிவுகளும் அபாய வலயத்திலிருந்து நீக்கப்பட்டு இரத்தினபுரி மாவட்டத்திற்கான பொதுவான ஊரடங்கு விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இரத்தினபுரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த இரு பொலிஸ் பிரிவுகள் அதி அபாய பகுதிகளாக பெயரிடப்பட்டன.
மேலும் குறித்த குடும்பத்தாருடன் தொடர்புகளைப் பேணிய இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை பகுதிகளைச் சேர்ந்த 73 பேர் இராணுவத்தினரால் தியத்தலாவை முகாமின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில்
அவர்கள் அனைவரும் திரும்பவும் வீடுகளுக்கு இன்று அனுப்பப்பட்டதனை தொடர்ந்து குறித்த இரு பொலிஸ் பிரிவுகளும் அதி அபாய வலயத்தில் இருந்து நீக்கப்ப்ட்டுள்ளன.