coronavirus update: 2 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 25, 2020

coronavirus update: 2 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.


சீனாவைப் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் 200 இற்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே கடுமையான உயிர்ச் சேதங்களைக் கொண்டுள்ளன.

கட்டுப்படுத்த முடியாமல் கொரோனா உயிரிழப்பு உயர்ந்து கொண்டே சென்று, இன்று 2 இலட்சத்தை கடந்துள்ளது. 2,874,625 பேர் வைரஸ் தொற்றிற்குள்ளாகியிருந்த நிலையில், 823,306 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவினால் அதிகம் உயிரிழப்பை சந்தித்தது அமெரிக்கா. உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்பில் கிட்டத்தட்ட கால் பங்கு உயிரிழப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அங்கு இதுவரை 52,936 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக 931,554 பேர் பாதிக்கப்பட்டனர்.

இத்தாலியில் இதுவரை 26,384 பேர் உயிரிழந்தனர். இதுவரை 195,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ஸ்பெயினில் இதுவரை 22,902 பேர் உயிரிழந்துள்ளனர். 223,759 பேர் பாதிக்கப்பட்டனர்.

பிரான்ஸில் இதுவரை 22,245 பேர் உயிரிழந்துள்ளனர். 159,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இதுவரை 20,319 பேர் உயிரிழந்துள்ளனர். 148,377 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

ஐரோப்பாவில் மட்டும் 119,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

——————————————————————–

அமெரிக்காவின் முன் கதவை மூடினோம்… பின்கதவால் வைரஸ் நுழைந்து விட்டது: 2 இலட்சத்தை எட்டும் உயிரிழப்பு!

கோவிட்-19 இல்லாத உலகத்தை உருவாக்குவதற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத உலகளாவிய பொது சுகாதார முயற்சி தேவையாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அன்டோனியோ குடெரெஸ் நேற்று தெரிவித்தார்.

உலகளவில் கொரோனா உயிரிழப்புக்கள் 2 இலட்சத்தை நெருங்கி வருகிறது.

இதுவரை கொரோனா தாக்கத்தால் 196,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,826,673 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 781,226 பேர் குணமடைந்தனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் 6,058 பேர் தொற்றினால் உயிரிழந்தனர்.

அமெரிக்கா

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,858 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 52,092 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 37,170 பேர் தொற்றுக்குள்ளாகினர். இதுவரை 923,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மேலுமொரு போர்க்கப்பலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. சுமார் 12 கடற்படையினர் தொற்று உறுதியாகியுள்ளனர்.

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பலில் இருந்தவர்களே பாதிக்கப்பட்டனர்.

நியூயோர்க்கில் கொரோனா வைரஸ் பரவியது சீனாவிலிருந்து அல்ல, ஐரோப்பாவிலிருந்தே பரவியது என நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து விமானங்களிற்கு தடைவிதிக்கப்பட்டாலும், சீனாவுடன் தொடர்புடைய பயணிகள் தடை மிக தாமதமாக விதிக்கப்பட்டதாக கூறினார். இதனால், சீனாவின் விமானங்களிற்கு தடைவிதிக்கப்பட்டாலும், ஐரோப்பா வழியாக வைரஸ் நுழைந்து விட்டது என்றார்.

“சீனா பயணத் தடைகளின் மூலம் நாங்கள் முன் கதவை மூடினோம். அது சரியானது. ஆனால் நாங்கள் பின் கதவைத் திறந்து விட்டோம்” என்றார்.

பிரித்தானியா

நேற்று பிரித்தானியாவில் 768 பேர் தொற்றிற்குள்ளாகினர். மொத்த உயிரிழப்பு 19,506 ஆக உயர்ந்தது. புதிதாக 5,386 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 132,464 பேர் பாதிக்கப்பட்டனர்.

இத்தாலி

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 25,969 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,021 பேர் தொற்றுக்குள்ளாகினர். இதுவரை 192,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்

கடந்த 24 மணித்தியாலத்தில் 389 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 22,245 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,645 பேர் தொற்றுக்குள்ளாகினர். இதுவரை 159,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

நேற்று ஸ்பெயினில் 367 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 22,534 ஆக உயர்ந்தது. புதிதாக 6,740 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 219,764 பேர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில் ஸ்பெயினில் பதிவான குறைவான உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.



ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நினைத்ததை விட முன்னதாகவே அந்த நாட்டில் வைரஸ் பரவல் ஆரம்பித்தது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை பற்றிய உலகம் அறியத் தொடங்கிய காலகட்டமான-பெப்ரவரி 14ஆம் திகதியே ஸ்பெயினில் கொரோனா தொற்றியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அயர்லாந்து

கடந்த 24 மணித்தியாலத்தில் அயர்லாந்தில் 220 மரணங்கள் பதிவாகின. நாட்டின் கொரோனா உயிரிழப்பு 1,000 ஐ கடந்தது. இதுவரை 1,014 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 577 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 18,184 பேர் பாதிக்கப்பட்டனர்.

லொக்டவுனை முடிக்க 3 கட்ட திட்டம்

லெபனானில் விதிக்கப்பட்டுள்ள லொக் டவுன் மே 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளர். ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இது முன்பை விட ஒரு மணிநேரம் குறைவானது.

லொக் டவுனை முடிப்பதற்கான 5 கட்ட படிமுறையை அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 28; மே 4, மே 11, மே 25 மற்றும் ஜூன் 6 ஆகிய திகதிகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்கின்றன. எனினும், சமூக விலகல், முகக்கவசம் அத்தியாவசியமானது.

சில வகை வாகனங்களை மே 10ஆம் திகதி வரை பாவிக்க முடியாது..

நிலை 3இல் முடிந்தவரை குறைந்த ஊழியர்களுடன் தனியார் வர்த்தங்கள் ஆரம்பிக்கலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசர தேவைகளை தவிர, 3ஆம் கட்ட முடிவு வரை வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.