கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தர தயார் என்று இந்திய பிரதமருக்கு வாடிப்பட்டி மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைக்கட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரது மகள் தென்னரசி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சிறு குறு விவசாயி. அவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாரேனும் மரணம் அடைந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய எங்கள் நிலத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாணவி கடிதத்தில் கூறியுள்ளார்.