இந்தியாவில் நான்கு வயது குழந்தையை காட்டு பன்றிகள் உயிருடன் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹர்ஷவர்தன் என்ற நான்கு வயது குழந்தையே இவ்வாறு பன்றிகளுக்கு இறையாகி உள்ளார்.
சிறுவன் சிங்காரேனி காலனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து விளையாட மாலை 4 மணியளவில் வெளியே சென்றபோது, காட்டு பன்றிகள் அவனை தாக்கிய இழுத்துச் சென்று உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளது.
குழந்தையின் சடலத்தைக் கண்டுபிடித்த உடனேயே அக்கம்பக்கத்தினர் சைதாபாத் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டனர். பொலிசார் வந்தபின் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அடையாளம் காட்டினர்.
ஹர்ஷவர்தன் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு காட்டு பன்றிகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்திருந்தனர், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உள்ளூர் பாலாலா ஹக்குலா சங்கம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர், அதில், குழந்தையின் மரணத்தில் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்காக குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.