குணம் குறி இல்லை ஆனாலும் தொற்று இருக்கிறது: யாழில் கண்டுபிடிக்கப்பட்ட மூவர் பற்றி அதிர்ச்சி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, April 3, 2020

குணம் குறி இல்லை ஆனாலும் தொற்று இருக்கிறது: யாழில் கண்டுபிடிக்கப்பட்ட மூவர் பற்றி அதிர்ச்சி தகவல்


யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று காலை விசேட அம்புலனஸ் வண்டி மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளனர்.

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது.

அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தாய்,மகன், மகள். இவர்கள் அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது.

இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கும், கண்காணிப்புக்கும் அம்புலன்ஸ் வண்டியினூடாக வெலிகந்த விசேட வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.