கொவிட் 19 காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுத்திப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன உலக நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை பேணுவது மிக அவசியம் என குறிப்பிட்டார்