ட்ரம்புக்கு கொரோனா? இரண்டாவது பரிசோதனை முடிவு வெளியானது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 3, 2020

ட்ரம்புக்கு கொரோனா? இரண்டாவது பரிசோதனை முடிவு வெளியானது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்றில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்புக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது முறையாகவும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.
ஜனாதிபதி ட்ரம்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையிலேயே அவருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றில் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 277,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7,392 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12,283 பேர் குணமடைந்துள்ளதாகவும் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.