சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய புகைப்படக் கருவியொன்றை பொலிசாருக்கு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பங்களை பொலிசார் தமது கடமைகளின் போது பயன்படுத்துவதில் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த புகைப்படக் கருவியின் மூலம் பிரச்சினைகளின் தீர்வுக்கும் முகாமைத்துவம் மற்றும் போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் இது பெரிதும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது