யாழ். போதனா வைத்தியசாலையில் கொரொனா சந்தேக நபர் திடீர் மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 23, 2020

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரொனா சந்தேக நபர் திடீர் மரணம்


யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை யிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எம்.அ.நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய கடந்த 23 ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்பொது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் கொரோனோ சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்றும் மாரடைப்பாலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்