போலியகொட மீன் விற்பனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட யாருக்கும் தொற்றில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 23, 2020

போலியகொட மீன் விற்பனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட யாருக்கும் தொற்றில்லை


பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். ( PCR ) பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், குறித்த மீன் விற்பனை நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரானபிலியந்தலை மீன் வியாபாரி சென்ற இடமான பேலியாகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் உள்ள 529 பேரிடம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது