இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 20, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

நேற்று (19.04.2020) இரவு மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை 271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 91 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 166 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 22 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது