இன்று காலை மாத்திரம் ஒரே இடத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 20, 2020

இன்று காலை மாத்திரம் ஒரே இடத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று!!கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் இன்று (ஏப்ரல் 20) திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 24 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 295ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 24 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

96 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

192 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்