தேர்தல் எப்போது? மஹிந்த தேசப்பிரிய கூறிய பதில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 20, 2020

தேர்தல் எப்போது? மஹிந்த தேசப்பிரிய கூறிய பதில்பொதுத் தேர்தல் எப்போது என்கிற கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.
தனது உத்தியோகபூர்வ முகநூலில் அவர் இன்று இதனை பதிவிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி, மே 28ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தன்னால் உடன்பட இயலாது என்பதைத் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் திகதி குறித்து பேச அனைவரும் இணைய வேண்டும் என்றுள்ளார்.
தாம் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் தெரிவித்த அவர் மக்களின் பாதுகாப்பே முதலிடம் என்றும் கூறியுள்ளார்.