ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 18, 2020

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பம்!

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை இந்தியாவில் மும்பை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசை கண்டறிவதற்கு இந்தியாவில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை , ரேபிட் ஆண்டிபொடி பரிசோதனை ஆகிய 2 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த பரிசோதனைகள், ஒருவரின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, மூக்கின்பின்புறம் உள்ள நாசியோபாரிங்கல் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி ஆகியவற்றை கொண்டு கண்டறியப்படுகிறது. இதற்கு கூடுதல் செலவு ஆகிறது என்பதுடன், முடிவை அறிய நீண்ட நேரம் பிடிக்கிறது.


இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான மாற்றுவழிமுறைகளை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

இதில் இந்தியா இப்போது ஒரு மைல் கல்லை எட்டி இருக்கிறது.


இந்தியாவின் நிதித்தலைநகரம் என்ற பெருமைக்குரிய மும்பை மாநகரில் உள்ள டி.ஒய்.பாட்டீல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் பயோ இன்பர்மேடிக்ஸின் பேராசிரியர் சந்தோஷ் போத்தே வழி நடத்துதலில் மாணவர் களான ரேஷ்மி சக்கரவர்த்தி, பிரியங்கா சவுகான், பிரியா கார்க் ஆகியோரும் இணைந்து கொரோனா வைரஸ் கண்டறிவதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.