கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் 16 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்தைச் சேர்ந்த குடும்பம் விடுமுறையை கழிக்க புளோரிடா மாகாணத்திலுள்ள “குவாடோமைன் கொண்டோமேனியம்” குடியிருப்பு கட்டிடத்தின் 16 ஆவது மாடியில் தங்கியிருந்துள்ளார்கள்.
இந்நிலையில், குறித்த குடும்பத்தைச் சேந்த 4 வயதான ஜெஸ்ஸி என்ற சிறுவன் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஜெஸ்ஸி தனது பெற்றோர், இரட்டை சகோதரர் மற்றும் அத்தை ஆகியோருடன் 16 ஆவது மாடியில் இருந்துள்ளார்.
அவ்வேளை , ஜெஸ்ஸியின் 51 வயதான தந்தை ஜெஸ்ஸியின் படுக்கையறையில் திரையிடப்பட்ட ஜன்னலை காலை வேளை திறந்து காற்று உள்ளே வர வைத்தார்.
பின்னர் தந்தை அறையிலிருந்து வெளியேறினார், சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தபோது, ஜன்னலில் இருந்த திரை 'ஓரளவு வளைந்திருப்பதை' கவனித்தார், எனவே அவர் அதை அகற்றி, ஜன்னலை மூடினார்.
பின்னர், ஜெஸ்ஸியின் அத்தை படுக்கையில் திரை கிடப்பதைக் கண்டு ஜன்னலைத் திறந்த போது, அவரது மருமகன் கீழே தரையில் கிடப்பதைக் கண்டார்.