ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிற்கு இந்திய பாணி தண்டனை வழங்கிய இரண்டு பொலிசார் மீது துறைரீதியான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, மருதானை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சில இளைஞர்கள் தோப்புக்கரணம் போடும் பாணியில் நிற்கும் படம் வெளியாகியிருந்தது. தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இந்த காட்சியை படம்பிடித்திருந்தார்.
இதையடுத்து, அந்த தண்டனையை வழங்கிய இரண்டு பொலிசார் மீது துறைரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.