புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கவேண்டாம்- பொலிஸார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 13, 2020

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கவேண்டாம்- பொலிஸார்


நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என்று பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கொண்டாட்டங்கள் – நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளை வழங்கியுள்ளார்.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தமிழ், சிங்களப் புத்தாண்டு கடைப்பிடிக்கும் நிலையில் கைவிசேசம், நாள் வேலை உள்ளிட்ட சம்பிரதாயங்களை குடும்பத்தினருடன் இணைந்து வீடுகளில் மட்டுப்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.