வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய மேலும் 30 கடற்படைச் சிப்பாய்களிற்கு கொரோனா தொற்று உறுதி - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, April 23, 2020

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய மேலும் 30 கடற்படைச் சிப்பாய்களிற்கு கொரோனா தொற்று உறுதி

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய மேலும் 30 கடற்படைச் சிப்பாய்களிற்கு கொரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது.
இன்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 30 சிப்பாய்களிற்கு தொற்று உறுதியானது.
நேற்று கடற்படை முகாமிலிருந்து விடுமுறையில் சென்ற சிப்பாயொருவர் நேற்று பொலன்னறுவை பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இன்று மேலுமொரு சிப்பாய் குருணாநகல் வைத்தியசாலையில் தொற்று உறுதி செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 30 சிப்பாய்கள் தொற்று உறுதியானது.
இதையடுத்து வெலிசறை கடற்படை தளம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.