ஊரடங்கையும் மீறி ஜெபக்கூட்டம் நடாத்திய குடும்பத்தினர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 5, 2020

ஊரடங்கையும் மீறி ஜெபக்கூட்டம் நடாத்திய குடும்பத்தினர் கைது


நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை – மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நேற்று சனிக்கிழமை நண்பகல் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்