தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளது என அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் தாவடியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தபட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் மாதிரிகளே கோரோனா தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
பரிசோதனை அறிக்கையின் முடிவுகளின்படி 18 பேரும் தொற்றுக்குள்ளாகவில்லையென தெரியவருகிறதாக போதனா வைத்தயசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்