தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 144 பேர் புனாணைக்கு அனுப்பி வைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 5, 2020

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 144 பேர் புனாணைக்கு அனுப்பி வைப்புதங்களது சுய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளை கடைப்பிடிக்காத குழுவொன்று இன்று அதிகாலை புனாணை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி அக்குரணையைச் சேர்ந்த 144 நபர்களே ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இவ்வாறு புனாணை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கவனக்குறைவு மற்றும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டியதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் கூறினார்