மட்டக்களப்பு ஆரையம்பதி, இராஜதுரைக் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார்.
32வயதுதுடைய கைலாயபிள்ளை சரண்ராஜ் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போன நிலையில்
நேற்று காணாமல் போன நேரத்தில் இளைஞன் ஒருவர் மண்முனை பாலத்தில் இருந்து ஆற்றினுள் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து குடும்பத்தார் மற்றும் பிரதேசவாசிகள் தோணிகளை பயன்படுத்தி தேட ஆரம்பித்தனர்.
எனினும் சடலம் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று குறித்த இளைஞனின் சடலம் காலை வேளையில் மண்முனை ஆற்றங்கரைப் பகுதியில் கரையொதிங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.