நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதன்படி யாழ்ப்பாணத்திலும் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக மதுக்கடைகள் திறக்காததால் குடிமக்கள் பெரும் திண்டாட்டத் அனுபவித்தனர். இன்று காலையில் மதுக்கடைகள் திறந்ததும், முதல் வேலையாக மதுக்கடைகளை நோக்கியே ஓடிச் சென்றனர்.
ஒரு மாத தவத்தை முடிப்பதுடன், மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தினால் அதற்கு தயாராகவும் மதுப் போத்தல்களை கொள்வனவு செய்து கொண்டு சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மதுக்கடைகளில் மக்கள் அலைமோதுவதாக சமூக ஊடங்களில் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.