சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பளை மத்திய கல்லூரி மாணவனை காணவில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 30, 2020

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பளை மத்திய கல்லூரி மாணவனை காணவில்லைகிளி /பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பளையைச் சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் (28/04/2020) பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த மாணவன் பளை மத்திய கல்லூரியில் கடந்த வருடம் 2019ஆண்டு சாதாரணதர பரீட்சை எழுதி முடிவுக்காக காத்திருந்தவர் எனவும் மாணவனுடைய பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவனுடைய பெற்றோர்கள் கடந்த ஒரு சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் தேடி பயன் எதுவும் இன்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.