நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 30 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடற்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நேற்றைய தினம் 2 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 506 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலய பிரதான மருத்துவ அதிகாரி மற்றும் 12 பொதுசுகாதார பரிசோதகர்கள் சேவையில் இருந்து விலக தீர்மானித்ததையடுத்து அந்த பிராந்தியத்தின் கடமைகள் தமது கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி ருவண் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பதிவான வாழைத்தோட்டம் பண்டாரநாயக்க மாவத்தையில் பணிகளை மேற்கொண்;ட குறித்த குழுவினர் சேவையில் இருந்து விலகி தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக தீர்மானித்திருந்தனர்.
தங்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத.
இதேவேளை, 32 மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 609 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.