சஹ்ரான் ஹசிம் உள்ளிட்ட தரப்பினர் ஒன்றுகூடியதாக நம்பப்படும் காணி! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, April 27, 2020

சஹ்ரான் ஹசிம் உள்ளிட்ட தரப்பினர் ஒன்றுகூடியதாக நம்பப்படும் காணி!ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசிம் உள்ளிட்ட தரப்பினர் தாக்குதலை நடத்த திட்டமிடுவதற்காக ஒன்றுகூடியதாக நம்பப்படும் திருகோணமலை – மூதூர் – தாஹித் நகரில் உள்ள காணி இன்று குற்றப்புலனாய்வு துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த முகாம் அமைந்துள்ள காணி கடந்த 24 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அடையாளம் காணப்பட்டது.

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை சேதாமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாதிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த காணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த பகுதியில் ஆயுதங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதன்போது சந்தேகித்திற்கிடமான எந்தவித பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை.

15 ஏக்கர் விஸ்தீரனமான குறித்த காணியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த காணியின் உரிமையாளர் மாவனெல்லை பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டது.

எனினும் அந்த காணியின் உண்மையான உரிமையாளர் தோப்பூர் பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடையது என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.