கொழும்பில் திடீரென உயிரிழந்த 82 வயது முதியவருக்கு கொரோனாவா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 27, 2020

கொழும்பில் திடீரென உயிரிழந்த 82 வயது முதியவருக்கு கொரோனாவா?பிலியந்தலையில் சுகயீனமுற்ற 82 வயது முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சுகயீனம் தீவிரமாகிய நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு நடத்திய பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


இதனால் அவரின் உடல் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் வசித்த பிலியந்தலை , சித்தமுல்ல பகுதியில் சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

குறித்த நபரின் உயிரிழப்பு காரணமாக பிலியந்தலை பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.