சுவிஸ் கூட்டாட்சியின் தகவலின் படி சுவிற்சர்லாந்திலும், அருகு நாடான லிக்தென்ஸ்ரைனிலும் ஒரு நாளில் 975 பேருக்கு கொறோனா தொற்றேற்பட்டுள்ளது. 04.04.20 சனிக்கிழமை (இன்று) நிலவரப்படி 20’278 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நாள் இடைவெளியில் தொற்றேற்பட்டோர் 49 பேர் அதிகமாகி விட்டனர். இதுவரை அனைத்து மாநிலங்களினதும் தகவல்களின் படி மொத்தம் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 64 விழுக்காடு ஆண்களாவார்கள். இறந்தவர்கள் 32 வயதிற்கும் 101 வயதிற்கும் இடையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 97 விழுக்காடு ஏற்கெனவே நோய் கொண்டவர்களாவார்கள். இரத்த அழுத்தம், இதயநோய் மற்றும் நீரழிவு போன்றவையே குறிப்பிட்டவர்களிற்கு இருந்த நோய்களாவன.
சனத்தொகையின் அடிப்படையில் திசினோ, யெனீவா, வாட் மற்றும் பாசல் சட் ஆகிய மாநிலங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவிலேயே புதிதாக தொற்றேற்படும் நாடுகளில் சுவிஸ் முதன்மை நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா
Translation by Nithurshana Raveendran
Source: BAG, 20min