கொரோனா வைரஸ் பெயரில் இணையத்தளத்தில் பண மோசடி மற்றும் குற்றச் செயல்கள்-பொதுமக்களுக்கு எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 11, 2020

கொரோனா வைரஸ் பெயரில் இணையத்தளத்தில் பண மோசடி மற்றும் குற்றச் செயல்கள்-பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன.

அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள்இ 'வாட்ஸ் ஆப்இ பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்' போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர்.
ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர்.

மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின் ஈ- - மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன.

அவற்றை பயன்படுத்தி, வங்கி கணக்குகளை விபரங்களைப் பெற்று, அதில் உள்ள பணத்தை இவர்கள் திருடுகின்றனர். ஒவ்வொருவரின் ஈ- - மெயில் முகவரிக்கும் கூகுள் தேடலிலும், கொரோனா பெயரில், சில சைபர் வைரஸ்களை அனுப்பி கணினிகளையும் முடக்குகின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: 'கொரோனா மற்றும் கோவிட்- - 19' என்ற பெயரில் வரும் on line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.

இணையதளம்
இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமானஇ டபிள்யூ.ஹெச்.ஓ., என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும்.

எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள் கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, - ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ- மெயிலுக்கு அனுப்புவதில்லை. 

நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு கேட்பதில்லை. எனவே, Online பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது