சர்வாரி புதுவருட பிறப்பை முன்னிட்டு மருத்துநீர் வழங்கலை வீடுகளுக்கு சென்று வழங்குமாறு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி போரதீவுப்பற்றுக்குட்பட்ட ஆலய அறங்காவலர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ள கோவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் அதனை 14ம் திகதி தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13.04.2020ம் திகதி பிற்பகல் 03.26 தொடக்கம் பிற்பகல் 11.26 மணிக்குள் மருத்துநீர் வைத்து நீராட வேண்டும். பிற்பகல் 07.26இற்கு புதுவருடம் பிறக்கின்றது. மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டும், ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதை கவனத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துநீரை கிராமசேவையாளரின் வழிகாட்டலில் வீடுவீடாகச் சென்று வழங்க வேண்டும் எனவும்,
புதுவருட பிறப்பு கொண்டாட்டத்தை தங்கள் குடும்பத்தினருடன் மட்டுப்படுத்தி கொண்டாடுமாறும், இப்பேரழிவில் இருந்து விடுபடுவதற்கு இறைவனை பிராத்திக்குமாறும் பிரதேச செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்