இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான பாடநெறிகளை கற்றுகொள்ளவும் இது குறித்த சந்தேகங்களை தீர்த்து கொள்ளவும் கல்வி அமைச்சு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1377 என்ற இலக்கமே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்திற்கு அழைப்பதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இந்த சேவையை பெற்றுகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது