கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது வைரஸ் பரவாத வண்ணம் பொதுமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலே இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போதே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி உரிமை தொடர்பில் இடம்பெற்ற கருத்துமுரண்பாடு மோதலாக மாறியதை அடுத்து, பெண்ணொருவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த பெண் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குளம் பகுதியில் பெண்ணொருவர் நபர் மீது பொல்லால் தாக்கியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
பன்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்