0/L பெறுபேறுகள் கணினிமயப்படுத்தப்பட்டன!- பரீட்சைகள் ஆணையர் சனத் பூஜித் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 10, 2020

0/L பெறுபேறுகள் கணினிமயப்படுத்தப்பட்டன!- பரீட்சைகள் ஆணையர் சனத் பூஜித்


2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சைகள் ஆணையர் சனத் பூஜித் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது