க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட்வில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் (2019) இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்

