மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை கரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 400 என்ற எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ராவின் மொத்த கரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது ஒரே நாளில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.