தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெண் மருத்துவர் வரை என சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்ததுடன், ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முடித்துள்ள இவர், கோழிக்கடை உரிமையாளர் என்று கூறப்படுகிறது.
இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு வந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி, காசி அந்த பெண் மருத்துவரிடம் நெருக்கமாக இருந்து வந்துள்ளான்.
அப்போது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளான்.
இதையடுத்து கல்லூரி படிப்பு முடிந்ததும், நாகர்கோவில் வந்த காசி, அந்த பெண் மருத்துவரிடம் பணம் கேட்டுள்ளான். பணம் தரவில்லையென்றால், நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். அப்படி 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.
கையில் பணம் கிடைத்தவுடன், காசி அதிகமாக டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, குறித்த பெண் மருத்துவர் பணம் தருவதை நிறுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காசி, அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவந்துள்ளான்.
இதைக் கண்டு மேலும், அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், இதற்கும் மேல் விட்டால் ஆகாது என்று கூறி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் செய்தார். அதன் பின் காசியை கைது செய்த பொலிசார் தொடர் விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட காசி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அந்த கோழிக்கறி கடையை வைத்து நடத்தி வந்தது காசியின் அப்பாதானாம், படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறார்.
மாலை நேரத்தில் கடை மூடிய பிறகு, சமூகவலைத்தளங்களில் காசி மூழ்கிவிடுவானாம். தன்னுடைய அழகான புகைப்படங்கள், ஜிம் பாடி புகைப்படங்கள், கூலிங் க்ளாஸ் போன்று ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் என பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளான்.
அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வாராம். இந்த கருத்துகக்ள பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.
லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர். அந்த பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி தனியாக அழைத்து பேசி, நெருக்கம் காட்டி, அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளார்.
காசியின் செல்போன் உட்பட அவரது பல ஹார்ட்டிஸ்குகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.
கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். இதில் பள்ளி மாணவிகளை கூட காசி விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே முழு தகவல்கள் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.