உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சதை்தை தாண்டியது – அமெரிக்காவில் மட்டும் 50 ஆயிரத்தை கடந்தது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 23, 2020

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சதை்தை தாண்டியது – அமெரிக்காவில் மட்டும் 50 ஆயிரத்தை கடந்தது



உலகெங்கும், கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சதை்தை நெருங்குகின்றது. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் நேற்று (23.04.2020) விபரத்தின் அடிப்படையில் இதுவரை 190,919 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,723,044 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 85 ஆயிரத்து 434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று(23.04.2020) ஒரு நாளில் மட்டும் 6,618 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 745,413 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

உலகளாவிய ரீதியில் இன்று காலை நிலவரப்படி 58,696 பேர் உடல் நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

நேற்றைய நிலவரப்படி மரணமானோர் விபரம்,

அமெரிக்காவில் இதுவரை 886,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 2,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 50,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 189,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 464 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 25,549 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை 213,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 440 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 22,157 உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை 158,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 516 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 21,856 உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் இதுவரை 138, 078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 638 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 18,738 பேர் உயிரிழந்துள்ளனர்.