கொரோனா சிகிச்சை விடுதியில் கர்ப்பிணிப் பெண் 2 நாளாக கொடூரர்களால் பாலியல் பலாத்காரம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 25, 2020

கொரோனா சிகிச்சை விடுதியில் கர்ப்பிணிப் பெண் 2 நாளாக கொடூரர்களால் பாலியல் பலாத்காரம்!


பீகார் மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் கூலி வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்த சமயத்தில் வீடு திரும்பிய அந்த பெண்ணுக்கு இரத்தப்போக்கு அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடனே விசாரணை நடத்தினர்.

அப்போது மருத்துவமனையில் தனி வார்டில் ஊழியர் ஒருவர் கர்ப்பிணியை 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த காரணத்தால் அந்த பெண்ணுக்கு இரத்தப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டதாகவும் பெண்ணின் மாமியார் புகார் கூறினார்.


இதனை போலீசார் விசாரணை நடத்தி மருத்துவமனை ஊழியரை கைது செய்தனர். இந்த மோசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்