பிரான்சில் ஈழத்துத் திரைப்பட வரலாற்று நாயகன் ஏ.ரகுநாதன் காலமானார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 22, 2020

பிரான்சில் ஈழத்துத் திரைப்பட வரலாற்று நாயகன் ஏ.ரகுநாதன் காலமானார்

ஈழத்தின் நாடக – திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன் அவர்கள் காலமானார்.

உலகத்தை உலுப்பி வரும் கொரோனா வைரஸ் தொற்று எங்கள் மூத்த கலைச்செல்வத்தையும் காவுகொண்டு விட்டது.

‘நெஞ்சுக்கு நீதி’ ‘புதியகாற்று’ ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர்.

‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தில் நாதஸ்வரக்கலைஞராக நாயகனாக நடித்திருந்தார்.

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு வந்து சேர்ந்தவர் இங்கும் நாடக, திரைப்படத் துறைகளில் ஈடுபட்டு வந்தார்.

பரிஸ் நகரில் பவளவிழா கண்ட ஒரே ஈழத்தமிழ்க் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள்.

தான் சந்தித்த கலைஞர்கள் என நூல் ஒன்றினை கலைஞர் பரா அவர்களின் உதவியுடன் அவரது இறுதிக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.

நோய் அவரது உடலை வாட்டியது என்பது உண்மை.

ஆனால், அவரது உள்ளம் எப்பொழுதும் கலையையும் கலைஞர்களையும் பற்றியே சிந்தித்தது.

நிறைவேறாத ஆசைகள் பலவற்றுடன் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் இறுதிப்பயணம்..

முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்