13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு கொரானா தொற்று - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 16, 2020

13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு கொரானா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 13 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா தொற்று நேற்று முந்தினம் சற்று குறைந்து 31-ஆக இருந்த நிலையில், நேற்று 38 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 33 பேருக்கு கொரானா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று 7 பேருக்கு கொரானா உறுதியானது.

திருவள்ளூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் 7 பேருக்கு கொரானா உறுதியானதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதில் அரியன்வாயல், பொன்னேரி, பழவேற்காடு செம்பாசிப்பள்ளி குப்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், வடமதுரையில் ஒருவருக்கும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று திருவள்ளூரில் ஒருவருக்கும், பேரம்பாக்கம், செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

ஆவடியில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 13 வயது சிறுமிக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு நேற்று ஒரே நாளில் 7 பேர் என மொத்த பாதிப்பு 40-ஆக அதிகரித்துள்ளது.