ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, April 16, 2020

ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மன்னார் உள்ள காணி பிரச்சினை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.