கொரோனாவின் மையப் புள்ளியாக மாறியது அமெரிக்கா: உலகில் 10 இலட்சத்தை நெருங்கும் தொற்றாளர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

கொரோனாவின் மையப் புள்ளியாக மாறியது அமெரிக்கா: உலகில் 10 இலட்சத்தை நெருங்கும் தொற்றாளர்கள்!உலக நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருந்து தினமும் ஆயிரக்கணக்கில் மனிதர்களைப் பலியெடுத்துவரும் கொரோனா வைரஸ் தற்பொது அமெரிக்காவை மொத்தமாக ஆட்கொண்டுள்ளது.

உலகில் மொத்தமாக 9 இலட்சத்து 36 ஆயிரத்து 170 பேர் மொத்தமாக இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 47 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன் நேற்று ஒரேநாளில் உயிரிழப்பு மாத்திரம் 4ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. உயிரிழப்பின் அடிப்படையில் இத்தாலி முன்னணியில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.

இந்த கொடிய வைரஸால் அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்து 47 பேரை மாய்த்துள்ள நிலையில் இதுவே ஒரு நாட்டில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய பதிவாக காணப்படுகிறது.

இதனைவிட அந்நாட்டில் 26 ஆயிரத்து 473 பேர் புதிய நோயாளர்களாக நேற்றுமட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரையான மொத்த உயிரிழப்பு அங்கு 5ஆயிரத்து 110 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கடும் பாதிப்புக்கு உள்ளான 5 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அமெரிக்காவில் நியூயோர் மாநிலமே கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதடன் அங்கு மொத்தமாக 83 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 2 ஆயிரத்து 219 பேர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து நியூ ஜெர்ஸி மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 355 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கலிபோர்னியாவிலும் பத்தாயிரம் பேரளவில் பாதிக்கப்பட்டு 213 பேர் உயிரிழந்ததுடன், மிச்சிகன் மாகாணத்திலும் பத்தாயிரம் பேர்வரை தொற்றுக்குள்ளாகி 337 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.