கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 3, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இத்தாலியில் இருந்து வந்தவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

26ஆம் திகதி குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு வேறு எவ்விதமாக நோய்களும் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் ஆரம்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது உடலுக்கு வைரஸ் தீவிரமாக நுழைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் மிகவும் வருத்தமளிப்பதாக அவர் தற்போது தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.