நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 22, 2020

நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி



காலநிலையை பொறுத்து நோய்கள் அதிகரித்து வருகிறது. அதுபோன்றது தான் டெங்கு காய்ச்சல் இதுமக்களிடையே பரவலாக காணப்படும் கொசு மூலம் பரவும் நோய். இதற்கு நீங்கள் என்ன மருத்துவம் பார்த்தாலும், கட்டாயம் நிலவேம்பு குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காரணம் இந்த நிலவேம்பு கசாயத்தில் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. கசப்பான சுவை கொண்டிருந்தாலும், இது பல காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.

அத்தகைய மருந்தை வீட்டில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்.
  • நிலவேம்பு வேர்
  • பற்படாகம்
  • வெட்டிவேர்
  • விலாமிச்சம் வேர்
  • கோரைக்கிழங்கு
  • மிளகு
  • சுக்கு
  • சந்தன பொடி
செய்முறை
தண்ணீரை முதலில் கொதிக்க வைக்க வேண்டும். அதில், குறிப்பிட்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதாவது 400மில்லி லிற்றர் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்தால் அதை சுண்டி 100மில்லி லிற்றர் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி சதாரண குடி நீர் போல் குடிக்கலாம்.

யாருக்கு என்ன அளவு

  • இது 6 மாதக் குழந்தைக்கு 10ல் இருந்து 15 அளவு துளிகள் தாய்பாலில் கலந்து குடிக்கலாம்.
  • 2வயது குழந்தைகளுக்கு 2ல் இருந்து 4மில்லி அளவு கொடுக்கலாம்.
  • பெரியவர்கள் 50மில்லி அளவிற்கு தினமும் குடிக்கலாம்.
  • டெங்கு காய்ச்சல் வந்தவர்கள், 2ல் இருந்து 3மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும்.
  • எந்த வித நோய் இல்லாதவர்கள் தினமும் 30மில்லி அளவு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.