மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த மதப் போதகர் ஒருவரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியாலை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் எனத் தெரிவித்து நேற்றையதினம் வவுனியாவிலும் எட்டுப்பேர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.